குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் -கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா!!
பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில்,
காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.
மார்ச் 15 ஆம் திகதி வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும் காட்டு விலங்குகளை கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது. கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள். குரங்குகளே பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள் என்றார்.
No comments