மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா!!!
செ.துஜியந்தன்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும், புதிய நிர்வாக கட்டிடம் திறப்பு விழா ஆகியன இன்று (04-03-2025) வித்தியாலய அதிபர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு திருகோணமலை காணிசீர்திருத்த ஆணையாளர் என்.விமல்ராஜ், கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.அருள்ராஜா, பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் கே.மதிசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை புதிய நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மற்றும் கிராமத்தின் வரலாற்றை கூறும் பாலையூற்று எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் பாடசாலையில் கல்வியில் சாதனைபடைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
No comments