அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தின் அதிபர் மு.தங்கேஸ்வரன் அதிபர் தனது 17 ஆண்டுகள் ஆசிரியர் சேவை 13 வருடங்கள் அதிபராக திறம்பட கடமையாற்றி கடந்த 27ம் திகதி தனது சேவையில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுகின்றார்.
நேற்றைய தினம் (28) அதிபரது அகவைநாளில் திருவள்ளுவர் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாகம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து சேவைநலன் பாராட்டு விழா (28) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ்,திருக்கோவில்வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் சோ சுரனுதன் மற்றும்ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான பிரதிகல்வி பணிப்பாளர் அமஜித்கான் ஓய்வுநிலை பிரதிக்கல்வி பணிப்பாளர் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆசிரியர்கள் மாணவர்கள் என இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களினால் வாழ்த்துப்பா மற்றும் வாழ்த்துரைகளும் கூறப்பட்டதுடன் அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செல்வி வினாயகமூர்த்தி
No comments