Home
/
இலங்கை செய்திகள்
/
பிரதான செய்திகள்
/
கல்முனை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வீடுகள் கையளிப்பு!!
கல்முனை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வீடுகள் கையளிப்பு!!
செ.துஜியந்தன்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும்2024 திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கில் தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சேனைக்குடியிருப்பில் அமைக்கப்பட்ட 10 வீடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகளிடம் இன்று (05-03-2025) கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.சிறீரங்கன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குமுதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் பயனாளிகளுக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததது. ஒவ்வொரு பயனாளிகளும் தங்களது பங்களிப்புடன் இவ் வீட்டுத்திட்டத்தினை முழுமையாக பூர்த்திசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வீடுகள் கையளிப்பு!!
Reviewed by Thashaananth
on
3/05/2025 12:16:00 PM
Rating: 5

No comments