விவேகானந்த பூங்காவில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 190வது ஜயந்தி விழா!
( வி.ரி. சகாதேவராஜா)
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 190வது ஜயந்தி விழா மட்டக்களப்பு கிரான்குளம்
விவேகானந்த பூங்காவில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் பெயரால் இலங்கையில் முதன் முதலாக மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்த பூங்காவில் பூங்கா ஏற்பாட்டாளர் கந்தப்பன் பிரதீஸ்வரன்
முன்னிலையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா கலந்து சிறப்பித்தார்.
இம்மாபெரும் செயற்திட்டத்தை முன்னெடுத்த விவேகானந்த பூங்கா ஸ்தாபகர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கந்தப்பன் சற்குணேஸ்வரனையும் அங்கு சமூகமளித்திருந்த அவரது சகோதரர் கந்தப்பன் பிரதீஸ்வரன் உள்ளிட்ட குழாத்தினரை சுவாமிகள் பாராட்டினர்.
சமூக நலன்புரி ஒன்றியம், விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி ,
முல்லைத்தீவு அன்னை சாரதா இல்லம், மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லம் போன்ற பல சமூகநோக்குடைய அமைப்புக்களை உருவாக்கி ஜீவ சேவையாற்றி வரும் க.சற்குணேஸ்வரன் அண்மையில் கிரான் குளம் விவேகானந்த பூங்காவை பிரமாண்டமான முறையில் ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments