Vettri

Breaking News

நாளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம் ; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம!!




( வி.ரி.சகாதேவராஜா)

 உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது என்று 
அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நாளை (17) திங்கட்கிழமை முதல் 20 ஆம் தேதி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 20ஆகும்.

ஆனால் , கல்முனை மாநகர சபை மற்றும் தெஹித்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடைபெறமாட்டாது. ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்.

 கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்பதும் அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments