பஸ் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ;மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்!!
ஹொரணை - ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments