Vettri

Breaking News

11 முதல் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை!!




 2024(2025)ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, பரீட்சை தொடர்பான மேலதிக தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


No comments