குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன.
இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments