Vettri

Breaking News

"ரொப் 100" (Top 100) விருது பெற்றார் காரைதீவைச் சேர்ந்த திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ்!!!




 Top 100 விருது பெற்றார் திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ்.

இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டுடனும்  கண்டியில் இடம் பெற்ற "Top 100" எனும் விருது வழங்கும் நிகழ்வில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என 100 நபர்கள்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 

அதில் காரைதீவை சேர்ந்த திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்) Top 100 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்விற்கு மத்திய மாகாண முன்னால் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வானது கடந்த 15 ஆம் திகதி கண்டி சம்பத் மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




No comments