தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டுக்களும், கௌரவிப்பு நிகழ்வும்!!
தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டுக்களும், கௌரவிப்பு நிகழ்வும்
கடந்த 2025/02/25 ஆம் திகதி புதன் கிழமை அம்பறை மவட்டம் கல்முனை பிரதேச கமு/கமு/அஸ்ஸீ ஹரா வித்தியாலயத்தில் சாதனை ஏற்படுத்திய தரம் 05 புலமை பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற 16 மாணவர்களையும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும் பாடசாலை SDEC மற்றும் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் M.H. றிஹாசா அவர்களும், விஷேட அதிதியாக பாடசாலை EPSI இணைப்பாளரும், ஆரம்பப்பிரிவுக்கான வளவாருமான M.றஹ்மான் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் SDEC இன் செயலாளர் MTM அனாப், MI. இர்பான், சமீறல் இவாஹி, ஹசானா கெஸில், ஜெயைஷாகியர் உட்பட அனைவரும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்ததுடன்
SDEC இனால் பாடசாலை அனைத்து ஆசிரியர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பாடசாலை தேவை கருதி பெற்றோர்களினால் கணினி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் புலமை பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
க.டினேஸ்.
No comments