இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தருடன் அட்டாளைச்சேனை இளங்கலை பட்டதாரிகள் சங்கம் (UGAA) சந்திப்பு!!
(நூருல் ஹுதா உமர்)
அட்டாளைச்சேனை இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் (UGAA) தலைவர் முஹம்மட் ஹம்தான் முனவ்வர் மற்றும் அதன் கணக்காய்வாளர் செய்யத் முஷர்ரப் மௌலானா ஆகியோர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களை சந்தித்திருந்தனர்.
மேற்படி இச்சந்திப்பில் இப்பிரதேச மாணவர்களுக்கான கல்விசார் ஒத்துழைப்புக்கள் மற்றும் சமூக மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். பல்கலைக்கழகத்திற்கும் அதனை அண்டிய சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பலதரப்பு கூட்டாண்மையை நிறுவுவதில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இப்பிரதேச இளங்கலை மாணவர்களின் தன்னக திறன்கள் மற்றும் செயல் திறன்களை மேம்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதின் நடைமுறைகள் தொடர்பில் சமூக விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் சமூகத்தில் உள்ள மாணவர்களுக்கு வளங்கள் மற்றும் கல்விக்கான ஒத்துழைப்புகளை விருத்தி செய்தல் போன்ற முக்கிய கலந்துரையாடல் விடயங்களாக அமைந்திருந்தன.

No comments