கல்முனை மிகவும் பிரம்மாண்டமான முறையில் SHAZ ACADEMY திறந்து வைப்பு!!
கல்முனையில் lolc நிறுவனத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (21/02/2025) அன்று SHAZ ACADEMY மிகவும் பிரமாண்டமான முறையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் எம். ஜே. எம். ஷார்யூன் (MSC in Quantity Surveyor,BSC in Quantity Surveyor), பாத்திமா ஹாப்சா (Co founder MSC in Quanitity Serveyor),எம்.நிவ்றா அனிஷா(Beauty consultant skin care specialist & mackup artist) ,திருமதி நவனிதா ரகுநாதன் (Cake making & Icing instructor), Mrs ஜெனிதா (Woman development officer Kalmunai) அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இப் பிரதேசத்தில் உள்ள யுவதிகளை வலுவூட்டுவதற்காக முக அலங்காரம் மற்றும் முகம் சுத்தம் செய்தல், முடி அலங்காரம் செய்தல் முடி வெட்டுதல், Cake Icing Class, Mehendi பாட நெறிகளை உள்ளடக்கி இத்துறையில் தேர்ச்சி பெற்ற வளவாளர்களை கொண்டு நடத்தப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்கள் யுவதிகள் இப்பாட நெறியில் கலந்து கொண்டு தங்களது திறன்களையும் ஆளுமைகளையும் விருத்தி செய்து வாழ்வாதாரத்தில் முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments