Clean Sri Lanka வேலைத்திட்டம்: காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, பாதுகாப்பு படையினர் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுப்பு!
நூருல் ஹுதா உமர்
நாடு தழுவிய ரீதியில் சுத்தமான கடற்கரை - "கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்" எனும் தொனிப்பொருளில் கடற்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, பாதுகாப்பு படையினர் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து மாளிகைக்காடு, காரைதீவு கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் விசேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.இந்நிகழ்வானது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் பங்குபற்றலுடன் காரைதீவு பிரதேச செயலாளர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொழில் சார் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எ.எஸ்.எம். பௌசாட் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு பிரிவினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், காரைதீவு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், பொது நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.
தூய்மையான சூழலில் – ஆரோக்கியமான வாழ்வு எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வின் மூலம், சுத்தமான சூழலை உருவாக்கவும், நம் இயற்கையை பாதுகாக்கவும் முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
No comments