Vettri

Breaking News

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர்!!




 பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார். யாழ் இந்துக் கல்லூரிக்கு சென்ற பிரதமர் பாடசாலை அதிபர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

பாடசாலையின் கல்வி செயற்பாடுகளை பிரதமர் ஆராய்ந்ததுடன், மாணவர்களுடனும் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பிரதமர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கும் பிரதமர் சென்றுள்ளார்.

இன்று மாலை சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு செல்லவுள்ள பிரதமர் அங்கு இடம்பெறும் மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். நாளைய தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments