ஆளும் கட்சியின் பக்கம் செல்லத் தயாரான திலித் ஜயவீர ;தவறியேனும் எமது பக்கம் வந்துவிட வேண்டாம்” என தெரிவித்த பிரதமர்!!
சர்வஜன அதிகாரம் கட்சித் தலைவரான திலித் ஜயவீர எம்.பி. நேற்று சபைக்கு நடுவாக ஆளும் கட்சியின் பக்கம் செல்லத் தயாரான போது “தவறியேனும் எமது பக்கம் வந்துவிட வேண்டாம்” என தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவரைத் தடுத்து நிறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போ,து எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்குப் பிரதமர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.இந்நேரத்தில் எதிர்க்கட்சியின் பக்கமிருந்து ஆளும் கட்சிப் பக்கமாக திலித் ஜயவீர செல்ல முயன்றபோதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்து அவரைத் தடுத்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான திலித் ஜயவீர, எதிர்க்கட்சியில் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏதோ கதைத்துவிட்டு, ஆளும் கட்சியின் பக்கத்தில் அமைச்சர் ஒருவரை சச்திப்பதற்காக சபைக்கு நடுவில் செல்ல முயன்றார். பாராளுமன்ற சம்பிரதாயப்படி சபையின் நடுவில் மறுபக்கத்திற்கு சென்றால், அது கட்சித் தாவலாகவே கருதப்படும். இந்நிலையில் திலித் ஜயவீர அமைச்சர் ஒருவரைச் சந்திப்பதற்காக சபைக்கு குறுக்காக செல்ல முயன்றார். இதன்போது எதிர்க் கட்சியிலிருந்த அஜித் பி பெரேரா உள்ளிட்ட சிலர் அவ்வாறு போக வேண்டாம் என்று அவரைத் தடுத்தனர்.அத்துடன் ஆளும் கட்சியின் பக்கத்தில் இருந்தவர்களும் இங்கே வர வேண்டாம் என்று அவருக்குக் கூறினர்.
இதன்போது சபையில் உரையாற்றிக்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,”நீங்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்து விடுங்கள். தவறியேனும் இந்தப்பக்கம் வந்துவிட வேண்டாம்” என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.
இவ்வேளையில்,தம்மை சுதாகரித்துக் கொண்ட திலித் ஜயவீர உடனடியாக தனது ஆசனத்திற்கு திரும்பிவிட்டார்.
No comments