Vettri

Breaking News

கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முன்னெடுக்கும் ஸஹர் உணவு விநியோகம்!!




நூருல் ஹுதா உமர்

கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் ஸஹர் உணவு இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும் என கல்முனையன்ஸ் போரம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் 0777849423 எனும் தொலைபேசி இலக்கத்தை மாலை 05.00 - 07.00  மணிக்குள் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறும், ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்தில் கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

No comments