Vettri

Breaking News

அரசாங்கத்தின் பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம் : ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் யஹ்யாகான்!!




நூருல் ஹுதா உமர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை ஐக்கிய மக்கள் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹ்யாகான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், அரசியல் எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துள்ள எதிர்க்கட்சியில் உள்ள சிறுபான்மை கட்சிகள் பட்ஜெட்டை எதிர்க்கின்றன. சூனியமாகிப் போயுள்ள தமது அரசியல் எதிர்காலத்தை மீண்டும் நிலை நிறுத்த இந்த சிறுபான்மை கட்சிகள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. மக்கள் இன்று இந்த சிறுபான்மை கட்சிகளை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதை கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அவதானிக்க முடிந்தது.

மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். மக்கள் பட்ஜெட்டை ஆதரிக்கின்றனர், வரவேற்கின்றனர். சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதேவேளை சிறுபான்மை கட்சி ஒன்றின் தலைவர் சிலரை கூலிக்கமர்த்தி எமது கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகின்றார். போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி இதை மேற்கொண்டு வருகிறார். அதனைப் பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை என்றும் யஹ்யா கான் தெரிவித்துள்ளார்.

No comments