இன்றைய வானிலை!!
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தேர்டடை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை வேளை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்; காலை வேளையில் குளிரான வானிலை நிலவும்.
No comments