Vettri

Breaking News

முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது-ஏ.சி.யஹ்யாகான்!!




 பாறுக் ஷிஹான்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைத்ததன் பின்னர் இன்று(23) மாலை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்துள்ளேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும்இ பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார். ஆனால் இப்போதுள்ளவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காக இதனை பாவித்து வருகின்றனர். 

நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும்இ ஏமாற்றங்களையும் நேரடியாக சந்தித வளாக காணப்படுகின்றேன்  எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த எண்ணமுமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்தார்.


No comments