Vettri

Breaking News

கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற சுகாதாரப் பணிப்பாளர்களுக்கான பாராட்டு விழா!




 ( வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை  ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் சீரிய பணியாற்றிச் சென்ற இரு சுகாதார பணிப்பாளர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வும், சிறப்பான சேவையாற்ற வந்திருக்கும் புதிய பணிப்பாளருக்கான வரவேற்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (22)
ஆதார வைத்தியசாலையில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர்களாக பணிபுரிந்து, இடமாற்றம் பெற்று, தற்போது மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றும் வைத்திய கலாநிதி மருத்துவர் இரா.முரளீஸ்வரன், மற்றும்  தற்போது அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக பணியாற்றும் மருத்துவர் எஸ்.சந்திரசேன ஆகியோருக்கான சேவை நலன் பாராட்டு பிரியாவிடை நிகழ்வாகவும், புதிதாக பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்தியகலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் அவர்களுக்கு வரவேற்பளிப்பதாகவும் இவ் விழாஏற்பாடு செய்யப்பட்டது .

விழா நாயகர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன்
விசேட பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந் நிகழ்வில், பணிப்பாளர்களால் ஏற்புரைகளும் ஏனைய வைத்தியர்களால் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன.

நன்றியுரையை அபிவிருத்தி குழு செயலாளர் கா.சந்திரலிங்கம்( முன்னாள் அதிபர்) நிகழ்த்தினார். 


இந் நிகழ்வுக்கு  வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள்,  உட்பட அபிவிருத்திகுழு உறுப்பினர்கள், வைத்தியசாலை நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.











No comments