Vettri

Breaking News

காரைதீவில் சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இரண்டு நாள் கருத்தரங்கு!




( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் Alliance Finance Company PLC இன் அனுசரணையில் (2024)2025ம் ஆண்டு க.பொ .த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இரண்டு நாள்முன்னோடி கல்விக்கருத்தரங்கு இன்று (15) சனிக்கிழமை காரைதீவில் ஆரம்பமானது.

கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்   கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது .

சிறப்பு அதிதிகளாக  கழகப் போசகர்களான  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா  மற்றும் Alliance Finance Company PLC இன் கல்முனை முகாமையாளர் எல்.எச்.விஜய், கருத்தரங்கு இணைப்பாளர் எஸ். ருசிதரன்( ஆசிரியர்) ஆகியோர் கலந்துகொண்டனர் . 

கழக செயலாளர் எஸ்.கிருஷாந்த் தொகுத்தளித்து நன்றி கூறினார்.
வரலாறு பாட ஆசிரியர் எஸ் லோரன்ஸ் முதல் வகுப்பை நடாத்தினார்.

நாளையுடன் கருத்தரங்கு நிறைவடையும்.









No comments