Vettri

Breaking News

தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு!!








நூருல் ஹுதா உமர்

தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி கிராம நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு அந்நூர் கலாசார மத்திய நிலைய முன்றலில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச பிரதான நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர்  ஜீ. அருணன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தர குமார், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், பாதுகாப்பு படையினர், காரைதீவு பிரதேச செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள், அல்- மீஸான் பௌண்டஷன், ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை, வை.எம்.எம்.ஏ., சமுர்த்தி அடிப்படை ஆதாய சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள் இந்த கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த காரைதீவு பிரதேச கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வானது காரைதீவு பிரதேசத்தை மூன்று வலயங்களாக பிரித்து இடம்பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments