Vettri

Breaking News

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா




 பாறுக் ஷிஹான்

 

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்த "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே "எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு   செவ்வாய்க்கிழமை (18)அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா,  வரிப்பத்தான்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.கே.ஜெஃபர், அக்கரைப்பற்று மாநகர சபை பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம் ஹனீபா ஆகியோர்கள் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நூலகர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,  மாணவர்கள், பெற்றோர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுன், சிறந்த வாசகர்களும் கெளரவிக்கப்பட்டனர்.









No comments