Vettri

Breaking News

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனால் பொதுக்கிணறுகள் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கி வைப்பு..!!!




ஏ.எஸ்.எம்.அர்ஹம்

கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் நலன் கருதி மிகநீண்ட நாட்கள் தேவையாக காணப்பட்ட குடிநீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக பொதுக் கிணறு அமைத்துத் தருமாறு அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக் கல்விப் பிரிவில் உள்ள சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலையம் மற்றும் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் நிர்வாகிகள் ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த கிணறுகள் அமைக்கப்பட்டு பாடசாலை நிருவாகிகளிடம் கையளித்து வைக்கப்பட்டன.

இதன்போது தலைநகர் கொழும்பிலிருந்து வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், கனடாவிலிருந்து வருகை தந்த C.S.M.W.A. பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை நிருவாகிகளிடம் இக்கிணறுகளை திறந்து கையளித்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் பிரதம அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், புத்தி ஜீவிகள், கண்ணியத்திற்குரிய உலமாக்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







No comments