Vettri

Breaking News

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்!!




பாறுக் ஷிஹான்

நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை   தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர்  அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர்   பிணை  வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள்  இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள    சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வேளை குறித்த சந்தேக நபர்  சிறைச்சாலை   அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில்  குறித்த சந்தேக நபர்    சந்தேகத்pல்    கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பி சென்ற  சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்  என்பதுடன் சுமார் 28 வயது மதிக்கத்தகக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments