நோன்பு காலத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் தீடீர் சோதனை!!!
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கடந்த புதன்கிழமை (12) இரவு திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்
இதன் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பழுதடைந்த மற்றும் களஞ்சியப்படுத்திய உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒன்பது கடை உரிமையாளர்களுக்கும் -ரூபா 25,000 -ரூபா 10,000- ரூபா 5,000 -என மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சுகாதாரமற்ற டேஸ்ட் கடைகள் உட்பட கிழக்கு பொரியல் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சென்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான சுகாதார குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச உணவகங்கள் உட்பட டேஸ்ட் கிழங்கு பொரியல் கடைகளின் சுகாதார நடைமுறைகளைப்பேணி உணவுகளைத் தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாதிருத்தலும் நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல் உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களைப் பேணி நடக்காத உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments