வட கிழக்கில் விகாரைகள் அமைக்க எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கூற்றும் காரணம்-முபாறக் மௌலவி!!
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என்று ஒரு கோமாளித்தனமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.அமைச்சராக இருந்து ரவூப் ஹக்கீம் என்பவர் பல பில்லியன்களை கல்முனை சம்மாந்துறை போன்ற பிரதேசங்களுக்கு ஒதக்கியதாக கூறி சிங்கப்பூர் ஆகவும் ஒரு துபாய் ஆகவும் அப்பகுதிகளை மாற்ற உள்ளதாகவும் கூறினார். இன்று அவர் அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை என உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி கேள்வி எழுபபியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (20) ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக மாநாட்டில் உலமா கட்சித் தலைவர் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
தேசிய மக்கள் கட்சியினால் பாதீடு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வி
சுமார் 35 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றது. மாகாண சபைகளில் ஆட்சியில் இருந்திருக்கின்றது. எதிர்க்கட்சியாகவும் இருந்திருக்கின்றது.இங்கு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை என்பவர் மாகாண சபையில் ஒரு அமைச்சராக இருந்திருக்கிறார். அதே போன்று நிஷாம் காரியப்பர் என்பவரும் கல்முனை மாநகர சபையின் ஒரு மேயராக இருந்திருக்கின்றார்.பல்வேறு அமைச்சுக்களுக்கு ஒரு அமைச்சராக றவூப் ஹக்கீம் என்பவர் இருக்கின்றார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கின்றார்.இவ்வாறு இருந்து கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்றால் நீங்கள் முன்னர் இருந்த காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை கேட்க விரும்புகின்றேன்.
மக்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் மக்களிடம் கொள்ளை அடித்து வாழ்ந்திருக்கின்றீர்கள் அரசாங்கம் தந்த நிதியினை உரிய முறையில் செலவழிக்கவில்லை அரசாங்கத்தோடு இருந்தும் அதனை சரியான முறையில் செயல்படுத்தவும் இல்லை. 2017 ஆம் ஆண்டு அளவில் அமைச்சராக இருந்து ரவூப் ஹக்கீம் என்பவர் பல பில்லியன்களை கல்முனைக்கு ஒதுக்கி இருப்பதாகவும் கல்முனை சம்மாந்துறை போன்ற பிரதேசங்களை சிங்கப்பூர் ஆகவும் ஒரு துபாய் ஆகவும் மாற்ற உள்ளதாகவும் கூறினார். இன்று அவர் அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை.இங்கு கிழக்கு மாகாணத்திக்கு வந்து மக்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லி ஏமாற்றி அதன் பின்னர் அவர்கள் சென்று விடுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. தற்போது இந்த அரசாங்கம் வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது.இந்த நேரம் அரசாங்கத்திற்கு நாங்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இவ்வாறு ஆதரிப்பதன் ஊடாக கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியினை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம் ஒன்றை கூற விரும்புகிறோம் .எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்.அது மாத்திரமல்ல அல்ல.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நடத்துவதற்கு ஒரு எதிரி ஒன்று இன்று தேவையாக உள்ளது. இதனால் தான் கிழக்கு மாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் சென்றதற்கு தமிழ்த் கூட்டமைப்பு மீது பழி போட பார்க்கின்றார்கள். இவ்வாறு பழி கூறுவதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு நிதியை தடுத்தால் நீங்கள் எங்கே சென்றீர்கள். இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று கேட்க விரும்புகின்றோம். அவ்வாறு தேசிய கூட்டமைப்பினால் தடுக்கப்பட்ட நிதியினை உங்களால் போராடி பெற்றுக் கொள்ள முடியாதா என்று நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கில் விகாரைகள் சிலைகள் என்பன அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும் .
ஏனென்றால் பெரும்பாலும் சிலைகள் என்பது வரும் உரிய மதங்களை பொறுத்தவரை புனிதமானவையாக உள்ளதுடன் வணங்க கூடியவையாகும். எனவே தமிழர் முஸ்லிம்களின் காணிகளில் விகாரை திறப்பது சிலைகளை அமைப்பது தொடர்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டிய செயல்.இந்த நாட்டை இனப் பிரச்சினைக்கு இட்டு சென்று இனங்களுக்கிடையில் மத ரீதியாக குழப்பத்தை உண்டாக்குவதற்கு இவ்வாறு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். சஜித் பிரேமதாச என்பவர் ஒரு காலத்தில் அமைச்சராக இருக்கின்ற பொழுது நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளை அமைப்போம் என்று கூறியதற்கு இணங்க இன்று அக்கருத்தை இப்பொழுது சிலர் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விடயத்தில் நாங்கள் கவலைப்படுகின்றோம் என குறிப்பிட்டார்.
No comments