Vettri

Breaking News

அறுவை சிகிச்சை துணி உற்பத்தியை அதிகரிப்பதில் அமைச்சர் கவனம்!!




 உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியை அதிகரிப்பதில் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

இவற்றை உரிய தரநிலைகளின்படி உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டில் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள குழுவுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட முன்னூறு உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.


No comments