செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!!
செ.துஜியந்தன்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக களுதாவளை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கணேசானந்தம் , போரதீவுப்பற்று விவசாய அமைப்பு தலைவர் எஸ். தர்மலிங்கம் உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
செ.துஜியந்தன்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக களுதாவளை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கணேசானந்தம் , போரதீவுப்பற்று விவசாய அமைப்பு தலைவர் எஸ். தர்மலிங்கம் உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments