Vettri

Breaking News

நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்-அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான்!!




 பாறுக் ஷிஹான்

தரம் 01 மாணவர்களுக்கான மகழ்ச்சிகரமான வித்தியாரம்பவிழா கிமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(31)  நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.  ரஹ்மானும் , கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலயத்தில் முன்பள்ளி பாடசாலை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.அப்துல் ரஹ்மானும் , பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதன் போது   மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு ஒழுக்க விழுமியம் நிறைநத நாட்டின் அபிவிருத்திக்குப் பொருத்தமான ஆரோக்கியமுள்ள சகதேகிகளாகவும் நேர்மனப்பாங்கு சிந்தனையுள்ள நற்பரஜைகளை உருவாக்க எவ்வாறு உருவாக்க வேண்டும். நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும் எனவும்' புன்னகைக்கும் முகங்களுடன் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குஙச் செல்கிறார்கள்' கருப்பொருளை உள்வாங்கி பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறந்த சூழல்இசமவயதுக்குழுக்கள் ,நேரமுகாமை ,ஆரோக்கிய மான உணவு என அனைத்தையும் பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி ஆரோக்கியமான ஒழுக்க விழுமியங்களை கட்டி எழுப்பவும் சமநிலை ஆளுமையை வழங்கவும் வழிகாட்ட வேண்டும் அறிவுரைகளை  அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.  ரஹ்மான்  வழங்கினார்.

மேலும் அதிபர் பாடசாலையின் அத்தியாவசிய கற்றல் தொடர்பான  தேர்ச்சிகள் பல்வேறு விடயங்களை  முன்வைத்ததுடன் உதவி அதிபரின் நன்றி உரை மற்றும்  துஆ ஸலவாத்துடன் நிகழ்வு சிறப்பாக  நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.








No comments