Home
/
இலங்கை செய்தி
/
கலைஞர் சுவதம்' எனும் விருது.அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதி!!
கலைஞர் சுவதம்' எனும் விருது.அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதி!!
V.Sugirthakumar
கலாசார அலுவல்கள் திணைக்களமானது உள்நாட்ட கலைஞர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கலைஞர்களை கௌரவப்படுத்தி 'கலைஞர் சுவதம்' எனும் விருதை அவர்களுக்கு வழங்கி கௌரவித்து வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் இன்று மூவர் கலைஞர் சுவதம் விருது வழங்கி இன்று (25)கௌரவிக்கப்பட்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகமானது மாவட்ட செயலகத்தோடும் பிரதேச கலாசார அதிகார சபையோடும் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஏற்பாடு செய்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்;கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் கே.பிரகஸ்பதி அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான கோகுலதாஸ் மற்றும் சர்மிளா பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பி.எச்.நிசங்க மற்றும் பி.எச்.ஜிஷாந்த எனும் பிரபல கிட்டார் வாத்திய கலைஞர்களும் எம்.நிஷோக்காந்த் எனும் கலைஞரும் கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான கலைஞர் சுவதம் விருதை மாவட்ட செயலாளர் வழங்கி வைக்க அவர்களுக்கான சான்றிதழ்களை பிரதேச செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இதன் பின்னர் கலைஞர்கள் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அமைதியான ஒழுக்கமான முழுமையான சிறந்த மனிதர்களை கொண்ட புனித தேசத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கின் அடிப்படையில் பயணிக்கும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கலை கலாசார பாரம்பரியங்களை வளர்க்க அர்ப்பணிப்போடு பாடுபடும் கலைஞர்களை கௌரவித்து இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கலைஞர் சுவதம்' எனும் விருது.அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதி!!
Reviewed by Thanoshan
on
2/25/2025 06:11:00 PM
Rating: 5

No comments