காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்தி வட மாகாண மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் திட்டம்!!
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்தி வட மாகாண மக்களின் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். திலகநாதன் சபையில் தெரிவித்தார்.
இந்த வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டத்தின் ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இம்முறை இரவு செலவுத் திட்டத்தில் வடமாகாண அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிதி வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சரி சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த நிதி கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மக்களும் பெரும் நன்மையடைவார்கள்.
வீதிகள் சேதமடைந்து காணப்படுவதால் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
No comments