Vettri

Breaking News

உலக இகிமி. துணைத் தலைவர் நாளை காரைதீவு விஜயம்!




( வி.ரி.சகாதேவராஜா)

உலக ராமகிருஷ்ண மடம்  மற்றும் மிஷன் துணைத் தலைவர் அதி வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத் சுவாமி   சுஹிதானந்த ஜி மஹராஜ்   நாளை(17) திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு காரைதீவு மண்ணுக்கு விஜயம் செய்யவுள்ளார் .

இலங்கையில் இராமகிருஷ்ண மிஷனை வியாபித்த முதல் இகிமி துறவி, உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவில், அவருக்கு பாரிய அளவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவில்  முதலில் அவர் கண்ணகை அம்மன் ஆலயம், விபுலானந்த மணி மண்டபம் ஆகியவற்றை தரிசித்த பின்னர், ஊர்வலமாக காரைதீவு இகிமி. சாரதா நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார்.

அங்கு "சாரதா பவன்" சுவாமியால் திறந்து வைக்கப்படவிருக்கிறது என்று இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.

அங்கு பக்தர்களுக்கு சுவாமி ஆசி வழங்கவுள்ளார்.



No comments