மலையகத்தில் இனி இராமகிருஷ்ண மிஷனை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்! மட்டு.இகிமிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ உரை
( வி.ரி.சகாதேவராஜா)
மலையகத்தில் இனி இராமகிருஷ்ண மிஷன் என்று ஸ்தாபனத்தை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதற்கான அடித்தளமே கொட்டகலை கிளை எனலாம்.
இவ்வாறு இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.
எழில்மிகு மலையகத்தில் கொட்டகலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இராமகிருஷ்ண ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் சிவானந்தா நலன்புரி நிலையத் திறப்பு விழாவில் வரவேற்புரை நிகழ்த்தியபோது சுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கதிர்காமம் இகிமிசன் மடம் மூடப்பட்டு 55 வருடங்களில் மலையகத்தில் மிசன் செயற்பாடுகள் எதுவுமே நடைபெறவில்லை.
சுமார் 55 வருடங்களின் பின்னர் கொட்டகலை கிளை இன்று திறப்புவிழா காண்கிறது.
என்னுடைய ஆழமான அன்புக்குரிய புத்தர்களே! நண்பர்களே! என்னுடைய வாழ்வின் எத்தனையோ ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த பெரிய கைங்கர்யம் இன்று நிறைவேறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கு வந்து இந்த வருடத்தில் 100 ஆண்டுகளாகின்றது.
கதிர்காமம் ராமகிருஷ்ண மிஷன் 55 ஆண்டுகளாக நிறுவன செயற்பாடு இல்லை..
அந்த வேளையில் ஓர் உயர்ந்த உள்ளம் விஜயபாலன் ரெட்டியார் லலிதா விஜயபாலன் தம்பதியர் இந்த இடத்தை எங்களுக்காக தந்து சகல உதவிகளையும் செய்து இந்த நிகழ்விலே அடக்கமாக கலந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் இல்லாத இந் நிலையம் இங்கு இல்லை எனலாம்.
அவருக்கு மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அது போன்று கொழும்பு சுவாமி இராஜேஸ்வரானந்தா அடிக்கடி தொடர்பு கொண்டு சகோதரரே
தம்பி நீங்கள் வேலை செய்யுங்கள் உங்களுக்கான ஆத்ம பலத்தை பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளுவார். நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.
என்றார். அவரும் இங்கு கலந்து சிறப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நேரத்திலே இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்த இராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ சுவாமி சுகிதானந்த ஜீ மகராஜ் மற்றும் இந்தியா சுவாமிகளின் வருகை மேலும் ஆன்மீக பலத்தை தருகிறது.
நாடெங்கிலும் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் மிசன் அபிமானிகள் வந்துள்ளீர்கள். அனைவரையும் வரவேற்கிறோம். என்றார்.
No comments