Vettri

Breaking News

விபுலானந்தாவில் "பவளவிழா" இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம் !




( காரைதீவு  சகா)

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட " "பவளவிழா" ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் 
நேற்று  (20) வியாழக்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

பெரு விளையாட்டுகளில் முதல் நிகழ்வாக எல்லே விளையாட்டுப் போட்டி காலையில் விபுலானந்தா மைதானத்தில் ஆரம்பமாகியது.

முதல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் போஷகரும் ,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

முன்னதாக, பாடசாலை விளையாட்டு கொடி சகிதம் அதிபர் அதிதி மற்றும் விளையாட்டு குழுவினர் இல்லக் கொடி சகிதம் எல்லே வீர வீராங்கனைகள் பாடசாலையில் இருந்து ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய இல்லங்கள் இம் முதல் எல்லே போட்டியில் ஆண் பெண் பிரிவுகளாக  பங்கேற்றன.

விளையாட்டுக் குழுவின் செயலாளர் விளையாட்டு ஆசிரியர் ஜெ.சோபிதாஸ் ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை மரதன் ( வீதி ஓட்டம்) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








No comments