தொற்றா நோய் தொடர்பான விசேட செயலமர்வு!!
நூருல் ஹுதா உமர்
தொற்றா நோய்களைத் தடுக்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவு முறை குறித்து தாதியர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த செயலமர்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இர்ஷாத் ஆகியோர் விளக்கமளித்தனர். கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட தாதியர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.
No comments