Vettri

Breaking News

வாங்காம் கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை!!




நூருல் ஹுதா உமர்

இறக்காமம், வாங்காம பிரதேச மக்களின் நலன் கருதி அப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களிடம் வாங்காமம் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் முன்னெடுக்கப்பட்ட கிளினிக் சேவை மூன்று தினங்களாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மாத்திரம் வழங்கிக்கொண்டிருக்கும் வாங்காமம் கிளினிக் நிலையத்தில் எதிர்வரும் காலங்களில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) ஒன்றை திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவொன்றை வாங்காமத்தில் திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வாங்காமம் பிரதேச மக்கள் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


No comments