Vettri

Breaking News

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பத்து மாணவர்கள் கௌரவிப்பு!!




(வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவும் இணைந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ. ரஹீம் தலைமையில் அல் முனீர் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திர குமார் கலந்து சிறப்பித்தார்.

அவர் முதலில் மரக்கன்று நட்டார். மேலும், பாடசாலை ஆசிரியர்கள் ஓய்வு அறையும் திறந்து வைக்கப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

அத்துடன், சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திர குமார், பிரதி கல்வி பணிப்பாளர் பி. பரமதயாளன், பிரதி கல்விப் பணிப்பாளர் எச். நைரோஷ்கான், வலயக் கல்வி கணக்காளர் எஸ். திருபிரகாசம், வலயக் கல்வி மாவட்ட பொறியியலாளர் எஸ். டிலக்ஸன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் வி.எம். முஹம்மட், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்



No comments