சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க செய்யும் கிழக்கு சுற்றுலா தளங்கள் !
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் சூழ்நிலையில் கூட சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்தளங்களில் கழிப்பறை வசதிகள் கூட ஒழுங்கான நிலையில் இல்லாதிருப்பதாக சுற்றுலா பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கன்னியா வெந்நீரூற்று, பளிங்கு கடற்கரை போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு சீட்டு பெற்று அனுமதிக்கப்பட்டாலும் கூட அப்பிரதேசங்களில் பயன்படுத்தும் விதமாக பொருத்தமான, சுத்தமான கழிவறை வசதிகள் இல்லை. உடை மாற்றும் இடங்களில் கூட துர்நாற்றம் வீசுவதாகவும், மனித கழிவுகள் உள்ளதாகவும் சீரான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனால் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த விடயத்தில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், சுற்றுலா அமைச்சு என்பன அவசரமாக கரிசனை செலுத்தி பாவனைக்கு பொருத்தமான இடங்களாக இவற்றை புனரமைக்க சுற்றுலா பயணிகள்
கேட்டுக்கொள்கிறார்.
No comments