Vettri

Breaking News

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு.!!




 எஸ். சினீஸ் கான்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய,  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.


இதன்போது, லாஹூர் பிராந்திய கௌரவ கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கை வந்துள்ள  வர்த்தகத் தூது குழுவினர்  வருகை தந்து, வர்த்தக துறையில் இங்கு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினர்.


குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உல்லாசப் பயணத்துறை தொழிலாண்மை என்பவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.



No comments