விபுலானந்தாவில் "பவளவிழா" மரதன் ஓட்டம்!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட " "பவளவிழா" ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் மரதன் ஓட்டம்
நேற்று (21) வெள்ளிக்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
பெரு விளையாட்டுகளில் முதல் நிகழ்வாக எல்லே விளையாட்டுப் போட்டி முதல் நாள் இடம்பெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் மரதன் ஓட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும் சத்திர சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நடேசன் அகிலன், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் போஷகரும் , ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா, மூத்த விளையாட்டு வீரரும் ஓய்வு நிலை கிராமசேவை நிருவாக உத்தியோகத்தருமான ரி.பி.புவனராஜா, பழைய மாணவரும் ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளருமான எம்.புண்ணியநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக, பாடசாலை விளையாட்டு கொடி சகிதம் அதிபர் அதிதி மற்றும் விளையாட்டு குழுவினர் இல்லக் கொடி சகிதம் மரதன் வீர வீராங்கனைகள் பாடசாலையில் இருந்து ஊர்வலமாக பிரதான வீதிக்குஅழைத்து வரப்பட்டனர்.
No comments