சாய்ந்தமருதில் சமுர்த்தி சமுதாய தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு!!
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் மற்றும் சமுர்த்தி சமுதாய தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (21) சாய்ந்தமருது வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ, மஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ, மஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொறுப்புக்களும் கடமைகளும் எனும் தலைப்பில் பிரதம பேச்சாளராக சாய்ந்தமருது பிரதேச செயலகத தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ,நஜீம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி வலய உதவியாளர் எம்.எஸ்.எம்.நௌஷாத், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர், உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2023ஆம், 2024ஆம் ஆண்களில் சமுர்த்தி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றி சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஐ.எல்.எஸ். ஹிதாயா மற்றும் வலய உதவியாளர் எம்.எஸ்.எம்.நௌஷாத், சமுர்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர் களான எம்.எம்.ஜாபீர், எம்.எம்.றஸானா, ஜே.எம்.றம்ஸா, எம்.ஐ,அன்சார், ஏ.எம்.அபுல் ஹுதா, எம்.எஸ்.றூருல் றிபா, எம்.ஆர்.எஸ்.ஷாமிலா, ஏ.எம்.காலிதீன் ஆகியோருக்கு அன்பளிப்புப் பரிசு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
மேலும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினை கடந்த காலங்களில் சிறந்த முறையில் வழிநடாத்தி நல்ல பல சமூக நலத்திட்டங்களை மேற்கொண்ட சமுதாயத் தலைவர்களான சிரேஷ்ட ஊடகர் எம்.ஐ,சம்சுதீன், ஏ.எம்.எம்.பசீல், இஸட்.எல்.முந்திறூன், எஸ்.எம்.முபிதா, எம்.ஏ,றஷீட், கே.எம்.கபீர், ஏ,எம்.நவாஸ், எம்.ஐ,அலாவுதீன் உள்ளிட்டோருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தந்குதடையின்றி மேற்கொள்வதற்கும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயற்பாட்டிற்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வரும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ,நஜீம் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் வேலைத்திட்டங்களை சிறப்பாக வழிநடாத்தி 2023 ஆம் ஆண்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக் களத்தின் தேசிய விருதினைப் பெற்ற சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்டோரை சமுதாயத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்வின் வரவேற்புரையினை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் நிகழ்த்தியதுடன் நன்றியுரையினை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
No comments