Vettri

Breaking News

காரைதீவு பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு!!




நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேசத்தில் உள்ள சகல முன்பள்ளி பாடசாலை சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு ஒன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா  இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின்  தலைமையின் கீழ் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளராக வைத்தியர் முஹம்மட் ஹில்மி அவர்கள் கலந்து கொண்டு சுகாதார மேம்பாட்டு விரிவுரைகளை வழங்கினர். அத்துடன் சகல முன்பள்ளி பாடசாலை சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிப்பை மேற்கொள்வதற்கான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு கிழமையும் ஒரு முன்பள்ளி பாடசாலைகளுக்கான பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கான தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவின் உதவி கல்வி பணிப்பாளர் , காரைதீவு பிரதேச முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட முன்பள்ளி பாடசாலை ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.





No comments