வெருகல் பின்தங்கிய கிராமங்களில் வள்ளுவம் அமைப்பின் மனிதாபிமான சேவைகள் !
வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லரிச்சல் பழங்குடியினர் மட்டித் தொழிலாளர் மற்றும் கருங்காலி சோலை ஆகிய மிகவும் பின்தங்கிய மூன்று ஊர்களில் வள்ளுவம் அமைப்பு வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்குதல் போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
கடந்த வாரம் அவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.
அவர்களுக்கு வீட்டு வசதிகள் வாழ்வாதார உதவிகள் மாதம் ஒரு முறை உலர் உணர்வுகள் வயோதிபர்களுக்கான உணவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
வள்ளுவம் அமைப்பு.பணிப்பாளர் ஜெஸ்லனட் ராஜன் செல்வநாயகம்.
( கனடா.) இவ் உதவிகளை செய்து வருகிறார்.
இது இவரின் நேரடி கண்காணிப்பில் நடந்துள்ளவேலைத் திட்டங்கள் ஆகும்.
மற்றும் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை சமூகத்தில் ஒரு முன் மாதிரியாக வாழ்வதற்கு வழிவகுக்கிறது.
கல்லரிப்பு கிராமத்தில் பழங்குடி பிள்ளைகள் போக்குவரத்து பிரச்சினை
பாடசாலைக்கு செல்ல வாகன வசதிகள் ஒழுங்கு படுத்தி கொடுத்து இப் பிள்ளைகள் இப்போது பாடசாலை செல்கிறார்கள்.
No comments