Vettri

Breaking News

மண்முனைப்பற்று பிரதேசத்தில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு !!




செ.துஜிமந்தன்

இன்று  ஞாயிற்றுக்கிழமை (16-02-2025)மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் பிரதேசத்திலுள்ள  ஜந்து இடங்களில்  பிரதேச செயலாளர் திருமதி தட்சிணாகெளரி டினேஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம் எனும் தொனிப்பொருளில் கடற்கரையை சுத்தம் செய்யும் இந் நிகழ்ச்சி திட்டம் புதுக்குடியிருப்பு ,  ஆரையம்பதி கிழக்கு, பாலமுனை, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம்  தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள கடற்கரையோரப்  பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. கரையோரம் பேணல் திணைக்களம், கடல்சார் சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை அரச அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இவ் கிளின் சிறிலங்கா திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்தி கிராம உத்தியோகத்தர் திருமதி தயனி கிருஷ்ணாகரன் ஏற்பாட்டில்  புதுக்குடியிருப்பு கடற்கரை பிரதேசத்தில் நடைபெற்றது. இதன் போது மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொதுநல அமைப்புகள், ஆலய நிர்வாக சபையினர், சமூக நல செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிளின் சிறிலங்கா ஆரம்பநிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி  தட்சிணாகெளரி டினேஷ், பிரதேச சபை செயலாளர் திருமதி றோகினி  விக்னேஸ்வரன் உட்பட கிராமசேவை உத்தியோகத்தர்கள், மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments