Vettri

Breaking News

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் புதிய மாணவிகளுக்கு வரவேற்பு !




நூருல் ஹுதா உமர் 2025 ஆம் கல்வியாண்டுக்கான தரம் 06 க்கு புதிய மாணவிகளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் பாடசாலை சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதியாக சியபத நிதி நிறுவனத்தின் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் முஹம்மத் பிரிம்சாத் கலந்து கொண்டார்.
பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.மசூது லெப்பை, எம்.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ்.மநூனா, என். தர்ஷன் நதீஹா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களின் பெற்றோர்களால் சீரமைத்து புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் மாணவிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. UMAR LEBBE NOORUL HUTHA UMAR BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL +94 766735454 / +94 757506564 umarhutha@gmail.com abukinza4@gmail.com

No comments