மாளிகைக்காடு, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாயசல்களுக்கு ஈத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு !
நூருல் ஹுதா உமர்
சவூதி அரேபியா அன்பளிப்பு செய்த ஈச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இருந்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாயலுக்கு கிடைக்க பெற்றிருந்தது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஈத்தம் பழங்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வைத்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு அந்தந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த ஈத்தம்பழ விநியோகம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரினால் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஒரு பள்ளிவாயலுக்கு 18 கிலோ ஈத்தம்பழம் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பொருளாளர் எம்.எம்.சலீம், மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஜெமீல் ஹாஜியார், மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments