ஒரு நாள் சேவையின் கீழ், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்ய வேண்டும்!!
ஒரு நாள் சேவையின் கீழ், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக திங்கட்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை, இதற்கான சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் திணைக்களம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்காக கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் மற்றும் கியூ வரிசைகளை இல்லாமல் செய்வதற்கென ஒரு நாள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் கீழ், கடவுச்சீட்டுக்களைப் பெற விரும்புவோர் முன்கூட்டி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை மூலம் பொதுமக்கள் 24 மணி நேரத்தில் தங்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
No comments