Vettri

Breaking News

ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்து!!




(வி.ரி.சகாதேவராஜா) 

கடந்தகால  அரசாங்க ஆட்சி காலத்தில் நடந்த ஊடக அடக்குமுறைகள் இந்த ஆட்சியிலும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.

மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்,காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கிய அரசு அந்த விசாராணைகள் தொடர்பில் துரிதப்படுத்த வேண்டும்.மேலும் அவ்வாறான விடயத்தில் நழுவல் போக்கில் அரசு செயலாற்றல் ஆகாது.

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

மேலும் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளிலும் பல சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான அடக்குமுறைகளை கடந்த ஆட்சியாளர்கள் போல் இந்த புதிய ஆட்சியாளர்களும் மேற்கொள்ளக் கூடாது.

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் சுயாதீனத்துக்கு பங்கம் வராமல் பாதுக்காக்க வேண்டியது அரசின் பொறுப்புடமையாகும்


No comments